Friday, 27 July 2012
Tuesday, 24 July 2012
அமலா பால் அமெரிக்காவில் மகிழிச்சி தன் ........
நடிகை அமலா பால் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று 2 வாரம் ஓய்வெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார்.
அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கேயே தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார்.
பெற்றோரும் அவருடன் சென்று இருந்தனர். தற்போது அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.
அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா சென்றதும், அங்குள்ள எனது உறவினர்களை சந்தித்ததும் இனிய தருணங்களாக அமைந்தது.
என் பெற்றோரை நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றேன். எனது தலை முடியையும் வித்தியாசமாக மாற்றியுள்ளேன், என்று கூறியுள்ளார்.
போலீசிடம் அபராதம் கட்டிய விஜய்
சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய். நான் "கிரீடம்", "மதராசப்பட்டினம்", "தெய்வத்திருமகள்" படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். பாவம்!
வரலாறு காணாத கவர்ச்சியில்..... கரீனா கபூர்
ஐஸ்வர்யா பாதியில் விலகிய ஹீரோயின் படத்தில் அவருக்கு பதில் படு கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கரீனா கபூர். மதுர் பண்டர்கர் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் புதியபடம் ஹீரோயின்.
நடிகையின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் தான் முதலில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஷூட்டிங்கும் நடந்து வந்த நிலையில், ஐஸ்வர்யா கர்ப்பமானதால் அவர் தொடர்ந்து அந்தபடத்தில் நடிக்க முடியாமல் போனது.
இதனையடுத்து அவர் இடத்திற்கு கரீனா கபூர் நடிக்க புக் ஆனார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் வரலாறு காணாத கவர்ச்சியில் கலக்கியுள்ளதாக பேச்சு அடிபட்டு வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் மது. இதில் எதிர்பார்த்ததைபோல கரீனா கபூர் படுகவர்ச்சியாக தோன்றியுள்ளார்.
படத்தின் போஸ்டரில் படுகவர்ச்சியாகவும், அவரை சுற்றிலும் ஏராளமான பத்திரிக்கைகளும், மதுக்கோப்பைகளும் கிடக்கிறது. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
labels: கரீனா கபூர் , ஐஸ்வர்யா
Thursday, 19 July 2012
சிறு வயதில் இருந்தே நான் அமிதாப்பின் தீவிர ரசிகை. ஜோடியாக அவருடன் நடிக்கும் குஷ்ப்பு
இந்திப்படமொன்றில் நடிகர் அமிதாப் பச்சன் ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளார்.
நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிப்பதற்காக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மேட் டாட் என்ற இந்திப் படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார்.
இதில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கிறாராம். அமிதாப்புடன் நடிக்கப் போவதால் மகிழ்ச்சியில் இருக்கும் குஷ்பு, இதுபற்றி அளித்துள்ள பேட்டியில்,
சிறு வயதில் இருந்தே நான் அமிதாப்பின் தீவிர ரசிகை. அவர் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். இப்போது அமிதாப் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.
ஷங்கர் படத்தில் பவர் ஸ்டார் நடித்த படம் தீபாவளிக்கு வெடிக்கும்
கோடம்பாக்கத்தில் பிஸியாக பரபரப்பாக பேசப்படும் ஒரே ஸ்டார் என்றால் அது பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் தான்.
எடுப்பான பல்லும், துடிப்பான முகமும், தடிப்பான உருவமும், கருப்பு கண்ணாடியில், வெள்ளை உடையில் அவர் தலையை கோதி விடும் ஸ்டைலும், எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் அதை அசால்ட்டாக எடுத்து கொள்ளும் மனபக்குவம் கொண்டவர், தனக்கு பெண் ரசிகர்கள் ரொம்ப இருக்காங்க, பேஸ்புக்கில் 5லட்சம் ரசிகர்கள் இருக்காங்க என்று சிரிக்காமல் சொல்பவர் இந்த மனிதர்.
தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் இவர், முதன்முறையாக சந்தானத்துடன் கைகோர்த்து இருக்கிறார். பல விளம்பர படங்களை இயக்கிய மணிகண்டன் என்பவர் இவர்களை வைத்து "கண்ணா லட்டு திண்ண ஆசையா" என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ராமநாரயணன் இப்படத்தை தயாரிக்கிறார். பவர்ஸ்டார், சந்தானம் ஆகியோருடன் சேது என்ற மற்றொரு ஸ்கின் டாக்டரும் நடிக்கிறார். படத்தின் கதைப்படி இவர்கள் மூவரும் ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள்.
ஆனால் அந்தப்பெண் இவர்கள் மூவரில் யாரை காதலிக்கிறாள் என்பதை கலகலப்பாக சொல்ல போகிறாராம் டைரக்டர். தற்போது இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார் பவர்ஸ்டார்.
இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர், விக்ரமை வைத்து இயக்கும் "ஐ" படத்தில் ஒரு முக்கிய ரோலில் சந்தானத்துடன் சேர்ந்து பவர் ஸ்டாரும் நடிக்கிறார். என்ன நம்பமுடியவில்லையா...? நம்பாவிட்டாலும் அதுதான் நிஜம்!
இதுகுறித்து பவர்ஸ்டார் நம்மிடம் கூறியதாவது, ஷங்கர் படத்தில் நடிப்பது உண்மை. எப்படி இப்படியொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டால் எல்லாம் கடவுளின் அருள் என்றார். சரி படத்தில் உங்கள் ரோல் என்ன என்று கேட்டபோது, சாரி! இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஷங்கர் படம்,
இப்போது 3 நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். இன்னும் 2நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றார் ரொம்ப அடக்கமாய். மேலும் தான் நடித்துள்ள "ஆனந்த தொல்லை" படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்,
தீபாவளி அன்று தான் என் படம் ரிலீஸ் ஆக வேண்டும். அப்போது தான் ரசிகர்களிடம் அது ரீச்சாகும். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றார் சிரிக்காமல்...!
Subscribe to:
Posts (Atom)