Wednesday, 10 October 2012
Friday, 10 August 2012
‘நடிக்க அழைத்து வந்துவிட்டு .....சக்ரி டுலெட்டி வெட்டி
‘நடிக்க அழைத்து வந்துவிட்டு காட்சிகளை வெட்டிவிட்டார் இயக்குனர் சக்ரி என்று திடீர் பரபரப்பு புகார் கூறி இருக்கிறார் பார்வதி ஓமனகுட்டன்.
உலக அழகி போட்டியில் பங்கேற்றவர் கேரளாவை சேர்ந்த பார்வதி ஓமனகுட்டன். இவர் அஜீத் ஜோடியாக ‘பில்லா 2 படத்தில் நடித்தார்.
ஆனால் தான் நடித்த பல காட்சிகளை இயக்குனர் சக்ரி டுலெட்டி வெட்டி எறிந்துவிட்டார் என்று புகார் கூறி உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:
என் வாழ்வில் நான் செய்த தவறை நினைத்து வருந்துவதில்லை. ஆனால் பில்லா 2 படத்தில் எனது வேடத்தை பற்றி நினைக்கும்போது வருத்தம் அளிக்கிறது.
என்னுடைய காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்தாலும் மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. நான் நடித்த காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட்டன.
ஆனால் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மிகக்குறைவு. இத்தனைக்கும் இப்படத்தில் நடிக்க என்னை அழைத்து வந்தவர் இயக்குனர் சக்ரிதான்.
இப்போதைக்கு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வேடத்திற்காக காத்திருக்கிறேன். ஆனால் எதற்காகவும் அதிக ஆசைப்படுவதில்லை. இவ்வாறு பார்வதி ஓமனகுட்டன் கூறினார்.
ரீமா சென் முதன்முறையாக படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது.....
இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை என்றார் ரீமா சென். தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ரீமா சென் முதன்முறையாக படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுராக் கஷ்யப் இயக்கிய ‘கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தில் துணிச்சலாக நடித்திருக்கும் காட்சிகள் பற்றி அவர் கூறியதாவது: கேங்ஸ் ஆப் வசேபூர்é படம் எனக்கு பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது என்கின்றனர்.
ஆனால் இதுதான் நான் நடிக்கும் முதல் படம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன்.
இப்படத்தில் நடித்தது சந்தோஷம். இப்படத்தின் வெற்றிக்கு படத்தில் பணியாற்றிய அனைவருமே தகுதியானவர்கள். எல்லோருக்கும் எல்லா திறமையும் இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு தகுந்த இடம் கிடைப்பதில்லை.
அத்தகைய வாய்ப்பை அனுராக் ஏற்படுத்தி தருகிறார். Ôவசேபூர்Õ படத்தில் துர்கா என்ற பாத்திரத்தில் நடித்தேன். இந்த வேடத்தில் நடிக்க என்னை தவிர வேறுயாரையும் தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றார் அனுராக்.
திருமணத்துக்கு பிறகு எனக்கு நல்ல வாய்ப்புகளாக கிடைக்கிறது. வசேபூர் படத்தில் துணிச்சலாக படுக்கை அறை காட்சியில் நடித்திருக்கிறேன்.
இப்படத்தை என் கணவர் பார்த்தார். அந்த காட்சி அவர் மனதை கனமாக்கி இருக்கிறது. நான் சம்பந்தப்பட்ட அந்த காட்சிகளை அவர் விரும்பவில்லை என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதை அவர் என்னிடம் நேரடியாக சொல்லவில்லை. இவ்வாறு ரீமா சென் கூறினார்.
Thursday, 9 August 2012
கவர்சியை அள்ளி கொட்டிய,,,,,,,ஆன்ட்ரியா
செல்வராகவனின் குரூப்பிலிருந்து வெளிவந்த பிறகு ஆன்ட்ரியாவுக்கு தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. முன்பு அவரை அணுக தயங்கியவர்கள்.
இப்போது தாராளமாக அணுகுகிறார்கள். ஆன்ட்ரியாவும் பொறுமையாக கதைகேட்டு வருகிறார். கமலின் விஸ்வரூபத்தில் நடித்து வரும் ஆன்ட்ரியா இந்தப் படம் வெளிவந்த பிறகுதான் தமிழில் புதிய படத்தில் புதிய சம்பளத்துடன் கமிட் ஆவது என்ற முடிவில் இருக்கிறார்.

இதற்கிடையில் இவர் நடித்துள்ள புதிய திருப்பங்கள் படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இதில் பத்திரிகையாளராக நடித்துள்ள ஆன்ட்ரியா. ஒரு ரகசிய செய்தி சேகரிப்பதற்காக பாலியல் தொழிலாளியாக வேஷம் கட்டுகிறாராம். இதில் தாராளமாக கவர்ச்சியும் காட்டியிருக்கிறாராம்.
இதற்கிடையில் அன்னாயும் ரசூலும் என்ற மலையாளப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஆன்ட்ரியாவின் கால்ஷீட்டுக்காக மலையாளத்தில் 5 படங்கள் வரை காத்திருப்பில் இருக்கிறது.
தமிழில் சில புதுமுக இயக்குனர்கள் உள்பட பத்து பேரிடம் கதை கேட்டிருக்கிறார். விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிப்பது என்பதை டிக் செ
மம்முட்டியையும், நயன்தாராவையும் வைத்து ....பசுபதியை...மறுத்துவிட்டா,,,
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸி நடிகையாக மாறியுள்ளார் நயன்தாரா. தெலுங்கில் இரண்டு படம்,
தமிழில் அஜித்துடன் ஒரு படம் என்று நடித்து வருகிறார். இந்நிலையில் டைரக்டர் ஒருவர் மம்முட்டியையும், நயன்தாராவையும் வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார்.
மம்முட்டியுடன் ஜோடி என்றதும் நயனும் முதலில் ஓ.கே., சொல்லிவிட்டார். ஆனால் மம்முட்டி இப்படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்கவும் அதிர்ந்து போன இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் வட்டம் அவருக்கு பதிலாக பசுபதியை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறது.
மம்முட்டி மாற்றப்பட்டு அவருக்கு பதில் பசுபதி தான் தங்களுக்கு ஜோடி என்று நயன்தாராவிடம் கூறியபோது அவர் என்னால் பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம்.
Saturday, 28 July 2012
Friday, 27 July 2012
கம்பி மேல் நடந்து சாகசம் செய்த ரோஜா!
"மாஜி நடிகை என்ற அடையாளத்தோடு, அரசியல் களத்திலும் புகுந்து சில காலம் கலக்கியவர் ரோஜா.சமீபகாலமாக,
அரசியல் பணியை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் கலைச் சேவையாற்ற வந்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரோஜா நடித்துள்ள படம், "வேட்டையாடு!
இதில் ஒரு பாடலில், பாண்டியராஜனுடன் இணைந்து, கழைக்கூத்தாடியாக நடனமாடி உள்ளார். கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கையை சொல்லும் அந்தப் பாடலில்,
கம்பி மேல் நடப்பது, ஒற்றை "வீல் சைக்கிள் ஓட்டுவது என்றெல்லாம் சாகசம் செய்கிறார் ரோஜா.
Tuesday, 24 July 2012
அமலா பால் அமெரிக்காவில் மகிழிச்சி தன் ........
நடிகை அமலா பால் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று 2 வாரம் ஓய்வெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார்.
அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கேயே தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார்.
பெற்றோரும் அவருடன் சென்று இருந்தனர். தற்போது அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.
அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா சென்றதும், அங்குள்ள எனது உறவினர்களை சந்தித்ததும் இனிய தருணங்களாக அமைந்தது.
என் பெற்றோரை நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றேன். எனது தலை முடியையும் வித்தியாசமாக மாற்றியுள்ளேன், என்று கூறியுள்ளார்.
போலீசிடம் அபராதம் கட்டிய விஜய்
சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய். நான் "கிரீடம்", "மதராசப்பட்டினம்", "தெய்வத்திருமகள்" படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். பாவம்!
வரலாறு காணாத கவர்ச்சியில்..... கரீனா கபூர்
ஐஸ்வர்யா பாதியில் விலகிய ஹீரோயின் படத்தில் அவருக்கு பதில் படு கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கரீனா கபூர். மதுர் பண்டர்கர் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் புதியபடம் ஹீரோயின்.
நடிகையின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் தான் முதலில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஷூட்டிங்கும் நடந்து வந்த நிலையில், ஐஸ்வர்யா கர்ப்பமானதால் அவர் தொடர்ந்து அந்தபடத்தில் நடிக்க முடியாமல் போனது.
இதனையடுத்து அவர் இடத்திற்கு கரீனா கபூர் நடிக்க புக் ஆனார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் வரலாறு காணாத கவர்ச்சியில் கலக்கியுள்ளதாக பேச்சு அடிபட்டு வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் மது. இதில் எதிர்பார்த்ததைபோல கரீனா கபூர் படுகவர்ச்சியாக தோன்றியுள்ளார்.
படத்தின் போஸ்டரில் படுகவர்ச்சியாகவும், அவரை சுற்றிலும் ஏராளமான பத்திரிக்கைகளும், மதுக்கோப்பைகளும் கிடக்கிறது. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
labels: கரீனா கபூர் , ஐஸ்வர்யா
Thursday, 19 July 2012
சிறு வயதில் இருந்தே நான் அமிதாப்பின் தீவிர ரசிகை. ஜோடியாக அவருடன் நடிக்கும் குஷ்ப்பு
இந்திப்படமொன்றில் நடிகர் அமிதாப் பச்சன் ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளார்.
நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிப்பதற்காக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மேட் டாட் என்ற இந்திப் படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார்.
இதில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கிறாராம். அமிதாப்புடன் நடிக்கப் போவதால் மகிழ்ச்சியில் இருக்கும் குஷ்பு, இதுபற்றி அளித்துள்ள பேட்டியில்,
சிறு வயதில் இருந்தே நான் அமிதாப்பின் தீவிர ரசிகை. அவர் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். இப்போது அமிதாப் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.
ஷங்கர் படத்தில் பவர் ஸ்டார் நடித்த படம் தீபாவளிக்கு வெடிக்கும்
கோடம்பாக்கத்தில் பிஸியாக பரபரப்பாக பேசப்படும் ஒரே ஸ்டார் என்றால் அது பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் தான்.
எடுப்பான பல்லும், துடிப்பான முகமும், தடிப்பான உருவமும், கருப்பு கண்ணாடியில், வெள்ளை உடையில் அவர் தலையை கோதி விடும் ஸ்டைலும், எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் அதை அசால்ட்டாக எடுத்து கொள்ளும் மனபக்குவம் கொண்டவர், தனக்கு பெண் ரசிகர்கள் ரொம்ப இருக்காங்க, பேஸ்புக்கில் 5லட்சம் ரசிகர்கள் இருக்காங்க என்று சிரிக்காமல் சொல்பவர் இந்த மனிதர்.
தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் இவர், முதன்முறையாக சந்தானத்துடன் கைகோர்த்து இருக்கிறார். பல விளம்பர படங்களை இயக்கிய மணிகண்டன் என்பவர் இவர்களை வைத்து "கண்ணா லட்டு திண்ண ஆசையா" என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ராமநாரயணன் இப்படத்தை தயாரிக்கிறார். பவர்ஸ்டார், சந்தானம் ஆகியோருடன் சேது என்ற மற்றொரு ஸ்கின் டாக்டரும் நடிக்கிறார். படத்தின் கதைப்படி இவர்கள் மூவரும் ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள்.
ஆனால் அந்தப்பெண் இவர்கள் மூவரில் யாரை காதலிக்கிறாள் என்பதை கலகலப்பாக சொல்ல போகிறாராம் டைரக்டர். தற்போது இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார் பவர்ஸ்டார்.
இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர், விக்ரமை வைத்து இயக்கும் "ஐ" படத்தில் ஒரு முக்கிய ரோலில் சந்தானத்துடன் சேர்ந்து பவர் ஸ்டாரும் நடிக்கிறார். என்ன நம்பமுடியவில்லையா...? நம்பாவிட்டாலும் அதுதான் நிஜம்!
இதுகுறித்து பவர்ஸ்டார் நம்மிடம் கூறியதாவது, ஷங்கர் படத்தில் நடிப்பது உண்மை. எப்படி இப்படியொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டால் எல்லாம் கடவுளின் அருள் என்றார். சரி படத்தில் உங்கள் ரோல் என்ன என்று கேட்டபோது, சாரி! இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஷங்கர் படம்,
இப்போது 3 நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். இன்னும் 2நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றார் ரொம்ப அடக்கமாய். மேலும் தான் நடித்துள்ள "ஆனந்த தொல்லை" படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்,
தீபாவளி அன்று தான் என் படம் ரிலீஸ் ஆக வேண்டும். அப்போது தான் ரசிகர்களிடம் அது ரீச்சாகும். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றார் சிரிக்காமல்...!
தமிழ் படத்திக்கு வரும் ஜான் ஸினா?
ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினர்.
அனுபம் கெர், அனில்கபூர், இர்பான்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரீடா பின்டோ மல்லிகா ஷெராவத், பிபாஷா பாஷு உட்பட பலர் ஹாலிவுட் படங்களில் நடித்துவருகின்றனர்.
இதையடுத்து இப்போது ஹாலிவுட் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்ப் படங்களில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக்குவது பேஷனாகி உள்ளது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ படத்தில் ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர் வில்லனாக நடித்திருந்தார். சர்வதேச அரசியல் பற்றிய படமான இதில் அவரது கேரக்டர் பாராட்டப்பட்டது. இதையடுத்து விஜய் இயக்கிய ‘மதாரசபட்டினம்’ படத்தில் வில்லனாக அலெக்ஸ் ஓ நெல் நடித்திருந்தார்.
காதல் கதையான இதில் அலெக்ஸின் நடிப்பு பொருத்தமாக இருந்தது. இவரே சந்தோஷ் சிவனின் ‘உருமி’ படத்திலும் நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘7ஆம் அறிவு’ படத்தில் ஜானி டிரை நுயன் வில்லனாக நடித்திருந்தார். மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டரான ஜானியின் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ‘விளையாட்டு’ என்ற படத்தில் ஆன்ட்ரூ என்பவர் நடித்திருந்தார்.
இந்த படங்கள் வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படங்களிலும் ஹாலிவுட்டில் இருந்து வில்லன்கள் இறக்குமதி ஆகின்றனர். ஜெயம்ரவி, த்ரிஷா நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படம், ‘பூலோகம்’. இதில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர்களான ஜான் ஸினா மற்றும் ஸ்டீவ் ஆஸ்டினிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஜான்ஸினா ‘12 ரவுண்ட்’, ‘மரைன்’ உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர். இதே போல ஸ்டீவ் ஆஸ்டின் ‘நாக்கவுட்’, ‘கன்டம்டு’ உட்பட பல படங்களில் நடித்தவர். இதையடுத்து அமீர் இயக்கும் ‘ஆதிபகவன்’ படத்தில் தாய்லாந்து ஸ்டண்ட் நடிகர்கள் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளனர்.
இதே போல கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்‘ படத்திலும் ஹாலிவுட் நடிகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வில்லன் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
Wednesday, 18 July 2012
சுவாசிகா வலியை தாங்கிக்கொண்டு நடித்த...ரணம் படத்தில்...40 முறை
ரணம் படத்தில் சுவாசிகா நடித்த காட்சி 40 முறை படமாக்கப்பட்டது. பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் ரணம்.
வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகி இருக்கும் இதில் புதுமுகம் வீரா ஹீரோ. ஹீரோயின் சுவாசிகா. முக்கிய வேடத்தில் சரத், கார்த்தி கேயன் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தில் வில்லன் ராஜேந்திரன், சுவாசிகா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. சுவாசிகாவை சுவற்றில் இடித்து மோதும் காட்சி படத்தில் முக்கிய காட்சியாக இடம்பெறுகிறது.
இதற்காக சுவாசிகாவின் தலையை சுவற்றில் மோதும் காட்சி 40 முறை வெவ்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட வலியை சுவாசிகா தாங்கிக்கொண்டு நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சங்கிலி முருகன் மற்றும் மலேசியா நடிகர்கள் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு பாலகிருஷ்ணன். இசை மரியா மனோகர். இவ்வாறு விஜயசேகரன் கூறினார்.
துப்பாக்கி படம் ரிலீஸ் ஆக இன்னும் சில..... விஜய்.. இவருடன் ஆன்ட்ரியா சேர்ந்து
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம்.
ஆக்சன் படமான இதில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துப்பாக்கி படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ள விஜய், இன்னொரு பாடலை பாடியுள்ளாராம். இவருடன் ஆன்ட்ரியா சேர்ந்து பாடியுள்ளாராம்.
மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல், செம ஹிட்டாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்ள்ளது.
இது... குத்துப் பாடல்கள் இல்லாத ஏக்கத்தை தீர்த்துவிடும்...மிஸ்கின்
இயக்குனர் மிஸ்கின், தான் இயக்கும் படங்களில் இடம் பெறும் குத்துப்பாட்டில் மஞ்சள் சேலையில் நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவ்வாறு இடம் பெற்ற சித்திரம் பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...., அஞ்சாதே படத்தில் கத்தால கண்ணால.. போன்ற பாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அந்த வகையில் அவர் தற்போது இயக்கி வரும் முகமூடி படத்திலும், அதுமாதிரியான பாடல் இடம்பெறுமா? என்ற கேள்விக்கு மிஸ்கின் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ படமாகும். அதில் குத்துப் பாடலில் மஞ்சள் சேலையில் ஆடுவது கதைக்கு பொருந்தாது. இருந்தாலும் படத்தில் டாஸ்மாக் கடையில் வைத்து பிரம்மாண்டமான முறையில் ஒரு பாடலை எடுத்து இருக்கிறோம்.
இந்த பாடல், என்னுடைய பழைய படங்களில் உள்ள குத்துப் பாடல்கள் இல்லாத ஏக்கத்தை தீர்த்துவிடும், என்றார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 20ம் தேதி நடைபெற உள்ளது.
labels:முகமூடி, மஞ்சள், சேலையில்லா, குத்துப்பாடல், மிஸ்கின், Not, yellow, sarry, dance, Myskin,
Tuesday, 17 July 2012
மீண்டும் நடிக்க வந்த ஜோதிர்மயி சின்ன திரையில்
கணவரை விவாகரத்து செய்துவிட்ட நடிகை ஜோதிர்மயி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தமிழில் தலைநகரம், பெரியார், நான் அவனில்லை என சில படங்களில் நடித்தார் ஜோதிர்மயி. அவர் தலைநகரம் படத்தில் நடிக்கும் முன்பே, 2004-ல் ஹரிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோலிவுட்டில் ஆது யாருக்கும் தெரியாமல் இருந்தது.
ஆனால் படம் வெளியான பிறகு நடந்த பிரஸ்மீட்டில் அவராகவே சொல்லிவிட, அப்போதே அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.
ஹரிகுமார் - ஜோதிர்மயி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்கள்.
கடந்த வருடம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. விவாரத்துக்குப் பின் சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிர்மயி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். கதை கேட்டு வருகிறார். இதற்கிடையில் மலையாள டி.வி. சேனல் ஒன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)