Friday, 10 August 2012

‘நடிக்க அழைத்து வந்துவிட்டு .....சக்ரி டுலெட்டி வெட்டி


                                       kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news          

                                           ‘நடிக்க அழைத்து வந்துவிட்டு காட்சிகளை வெட்டிவிட்டார் இயக்குனர் சக்ரி என்று திடீர் பரபரப்பு புகார் கூறி இருக்கிறார் பார்வதி ஓமனகுட்டன். 

                                 உலக அழகி போட்டியில் பங்கேற்றவர் கேரளாவை சேர்ந்த பார்வதி ஓமனகுட்டன். இவர் அஜீத் ஜோடியாக ‘பில்லா 2 படத்தில் நடித்தார். 
                                   ஆனால் தான் நடித்த பல காட்சிகளை இயக்குனர் சக்ரி டுலெட்டி வெட்டி எறிந்துவிட்டார் என்று புகார் கூறி உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: 
                           என் வாழ்வில் நான் செய்த தவறை நினைத்து வருந்துவதில்லை. ஆனால் பில்லா 2 படத்தில் எனது வேடத்தை பற்றி நினைக்கும்போது வருத்தம் அளிக்கிறது. 
                                     என்னுடைய காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்தாலும் மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. நான் நடித்த காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட்டன. 
                                ஆனால் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மிகக்குறைவு. இத்தனைக்கும் இப்படத்தில் நடிக்க என்னை அழைத்து வந்தவர் இயக்குனர் சக்ரிதான். 
                                  இப்போதைக்கு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வேடத்திற்காக காத்திருக்கிறேன். ஆனால் எதற்காகவும் அதிக ஆசைப்படுவதில்லை. இவ்வாறு பார்வதி ஓமனகுட்டன் கூறினார்.

No comments:

Post a Comment