பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸி நடிகையாக மாறியுள்ளார் நயன்தாரா. தெலுங்கில் இரண்டு படம்,
தமிழில் அஜித்துடன் ஒரு படம் என்று நடித்து வருகிறார். இந்நிலையில் டைரக்டர் ஒருவர் மம்முட்டியையும், நயன்தாராவையும் வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார்.
மம்முட்டியுடன் ஜோடி என்றதும் நயனும் முதலில் ஓ.கே., சொல்லிவிட்டார். ஆனால் மம்முட்டி இப்படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்கவும் அதிர்ந்து போன இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் வட்டம் அவருக்கு பதிலாக பசுபதியை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறது.
மம்முட்டி மாற்றப்பட்டு அவருக்கு பதில் பசுபதி தான் தங்களுக்கு ஜோடி என்று நயன்தாராவிடம் கூறியபோது அவர் என்னால் பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம்.
No comments:
Post a Comment