Thursday, 19 July 2012

தமிழ் படத்திக்கு வரும் ஜான் ஸினா?

                            kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news    


                                ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினர்.


                       அனுபம் கெர், அனில்கபூர், இர்பான்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரீடா பின்டோ மல்லிகா ஷெராவத், பிபாஷா பாஷு உட்பட பலர் ஹாலிவுட் படங்களில் நடித்துவருகின்றனர். 


                   இதையடுத்து இப்போது ஹாலிவுட் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்ப் படங்களில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக்குவது பேஷனாகி உள்ளது.
                    எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ படத்தில் ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர் வில்லனாக நடித்திருந்தார். சர்வதேச அரசியல் பற்றிய படமான இதில் அவரது கேரக்டர் பாராட்டப்பட்டது. இதையடுத்து விஜய் இயக்கிய ‘மதாரசபட்டினம்’ படத்தில் வில்லனாக அலெக்ஸ் ஓ நெல் நடித்திருந்தார்.



                                காதல் கதையான இதில் அலெக்ஸின் நடிப்பு பொருத்தமாக இருந்தது. இவரே சந்தோஷ் சிவனின் ‘உருமி’ படத்திலும் நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘7ஆம் அறிவு’ படத்தில் ஜானி டிரை நுயன் வில்லனாக நடித்திருந்தார். மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டரான ஜானியின் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ‘விளையாட்டு’ என்ற படத்தில் ஆன்ட்ரூ என்பவர் நடித்திருந்தார். 


                               இந்த படங்கள் வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படங்களிலும் ஹாலிவுட்டில் இருந்து வில்லன்கள் இறக்குமதி ஆகின்றனர். ஜெயம்ரவி, த்ரிஷா நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படம், ‘பூலோகம்’. இதில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர்களான ஜான் ஸினா மற்றும் ஸ்டீவ் ஆஸ்டினிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
                             ஜான்ஸினா ‘12 ரவுண்ட்’, ‘மரைன்’ உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர். இதே போல ஸ்டீவ் ஆஸ்டின் ‘நாக்கவுட்’, ‘கன்டம்டு’ உட்பட பல படங்களில் நடித்தவர். இதையடுத்து அமீர் இயக்கும் ‘ஆதிபகவன்’ படத்தில் தாய்லாந்து ஸ்டண்ட் நடிகர்கள் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளனர். 



                              இதே போல கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்‘ படத்திலும் ஹாலிவுட் நடிகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வில்லன் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

No comments:

Post a Comment