ஏற்கனவே, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானோடு நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். தற்போது, ஹாலிவுட் நடிகர் ஆண்டோனியா பண்டாரசை காதலிப்பதாக புரளி புறப்பட்டுள்ளது. இது குறித்து மல்லிகா ஷெராவத் கூறுகையில், நான் இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்கிறேன். இதனால் உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். எனது புகழை கெடுப்பதற்காகவே ஒரு கும்பல் கிளப்பி விடும் வதந்திதான் இது. எனக்கு காதல், திருமணம் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நான் யாருடன் பழகினாலும் கொஞ்சம் சுதந்திரமாக பழகுவேன். அதை வைத்து என்னை எடை போடக்கூடாது. காதல் செய்தால் திருமணம் செய்ய வேண்டும். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட வேண்டும். எனது ரசிகர்களை நான் ஏமாற்ற நினைக்கவில்லை என்றும் அதனால் கடைசி வரை திருமணம் செய்யாமலே தனி மனுஷியாகவே இருக்க விரும்புகிறேன்......... |